வழிகாட்டி பெயர்பலகை உடைத்தெறியப்பட்டது

நேற்று இரவு எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்திற்கு வவுனியா நகரசபை அனுமதியுடன் நாம் பொறுத்தியிருந்த இந்த வழிக்காட்டி பலகையின் ஊடாக பலர் நன்மைகளைப் பெற்று வருகின்றார்கள். வவுனியா நகரிலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எமது அலுவலகத்தை கண்டுபிடித்து வர முடியாத நிலையில் மக்கள் இருந்த பொழுது இவ் வழியாட்டி பெயர்பலகைகள் ஹொரவப்போத்தானை பிரதான வீதியிலும் ஒழுங்கைக்குள்ளும் பொறுத்தப்பட்டிருந்தன.

இதனூடாக அண்மைக்காலமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் எனது அலுவலகத்திற்கு வந்து தமக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். இவ்வறான நிலையில் மக்களுக்கு வழிட்டியாக இருந்த இப்பெயர் பலகையை தகர்த்தெறிவதன் ஊடாக பிரபா கணேசனை அழித்து விட முடியும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் இவர்களது செயல்பாட்டின் ஊடாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் கல்விக்கான உதவியினையே இவர்கள் தகர்த்தெறிந்துள்ளார்கள் என்பதனை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் செயல்பாட்டினால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை எளிய பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுமேயாகும்.
இவ்வாறான வன்முறை சம்பவங்களை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். கோழைகள் போல் நள்ளிரவில் இவ்வாறான அடாவடித்தனத்தை செய்பவர்களை நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன். இன்று இதனை கேள்விப்பட்ட பல நூற்றுக்கணக்கான எமது இளைஞர் அணி தோழர்கள் வெகுண்டு எழுந்துள்ளார்கள்.

இவர்களை சமாளிப்பது இன்று சிரமமான காரியமாக எனக்குள்ளது. வன்முறைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். மாறாக நேர்மையான ஊழலற்ற மக்களால் அன்பு கொண்ட எனது அரசியலுடன் இணைந்து செயல்பட வருமாறு என்னை எதிரியாக நினைப்பவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.


Recommended For You

About the Author: Ananya