$2,500 இற்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளிச் சாறு!

லண்டனில் ஒரு போத்தல் Heinz தக்காளிச் சாறு, 1,500 பவுண்ட்டிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிரபல பிரித்தானிய பாடகர் எட் ஷீரனின் உடலில் குத்தப்பட்டுள்ள பச்சையைத் தழுவி போத்தல் வடிவமைக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.

Heinz தோற்றம் கண்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் வகையில் ஷீரனின் உடலிலுள்ள பச்சையைத் தழுவி வடிவமைக்கப்பட்ட 150 போத்தல்கள் உலகெங்கும் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றில் மூன்று இதுவரையில் ஏலத்தில் விற்பனையாகியுள்ளன. அவை முறையே 1,050 பவுண்ட், 1,100 பவுண்ட், 1,500 பவுண்ட்டிற்கு விற்பனையாகியுள்ளன.

போத்தல்களின் விற்பனை மூலம் கிடைக்கும் நிதி இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியிலுள்ள சிறுவர்கள் இல்லத்திற்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor