யாழிலிருந்து மாடுகளை கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்டோர் கைது!

யாழில் இருந்து மாடுகளை கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இருந்து யாழ்ப்பாணம் – மன்னார் வீதி வழியாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் அவ்வழியாக வந்த படி ரக வாகனத்தை இராணுவத்தினர் வழிமறித்து சோதனையிட்ட போது இரண்டு மாடுகளை யாழில் இருந்து கடத்தி செல்லப்படுவதனை உறுதி செய்து , மாடுகளையும் வாகனத்தையும் மீட்டதுடன் . வாகனத்தில் பயணித்தவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்பதனையும் இராணுவத்தினர் கண்டறிந்தனர்.
மீட்கப்பட்ட மாடுகள் மற்றும் வாகனம் என்வற்றையும் , கைது செய்யப்பட்ட நபர்களையும் இராணுவத்தினர் சாவகச்சேரி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதேவேளை  யாழில் இருந்து கஞ்சா போதை பொருளை கடத்தி சென்ற நிலையில் மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவரையும் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: ஈழவன்