வெள்ளத்தில் முழ்கியது பஸ் தரிப்பிடம்!!

வவுனியாவில் இன்று (17.08) காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடம் வெள்ளத்தில் முழ்கியுள்ளது.

நீர் வழிந்தோடி செல்லும் வடிகானில் நீர்பாசன திணைக்களத்தின் குழாய் பைப்புக்கள் காணப்படுவதினால் (குறித்த குழாய் பைப்பினுள் குப்பைகள் அடைந்த நிலையில் காணப்படுகின்றது) நீர் வழிந்தோடி செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாகவே குறித்த பஸ் தரிப்பிடம் நீரில் முழ்கியுள்ளது.

அத்துடன் கூமாங்குளம் , நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வரட்சியான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினமும் இன்றும் பெய்து வரும் மழை காரணமாக மக்கள் மனமகிழ்வடைந்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor