கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு!

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்பந்தப்பட்ட சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமிக்க நீதி அமைச்சர் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, லொஹான் ரத்வத்த கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்