யாழ்.நகரில் வீடுடைத்து 10 பவுண் நகை திருட்டு – ஒருவர் கைது – மற்றுமொருவர் தலைமறைவு!

யாழ் நகரில் வீடுடைத்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்படுகிறார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சுபாஷ் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் 15ஆம் திகதி 10 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன.

வீட்டிலுள்ள தாயும் மகளும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் வீடுடைத்து இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவில் அன்றைய தினமே முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதுதொடர்பில் பொலிஸாரினால்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் அடிப்படையில், குருநகரைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 தங்கப் பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.

 


Recommended For You

About the Author: ஈழவன்