ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழில் நுட்ப கூடம் கையளிப்பு !

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின்   ( Jaffna Medical Faculty Overseas Alumini – USA) நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடதத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப கூடத்தின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை  காலை இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திரகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தகவல் தொழில் நுட்ப கூடத்தைத் திறந்து வைத்தார்.
முன்னாள் மருத்துவ பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ். ரவிராஜ், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், முன்னாள் மாணவர்கள் உட்படப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டின் தற்போதைய கொவிட் 19 சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இந்த நிகழ்வு மிகவும் குறைந்தளவானர்களுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.


Recommended For You

About the Author: ஈழவன்