பொலிஸ் அத்தியட்சருக்கு இடமாற்றம்

உடன் அமுலாகும் வகையில் கண்டி பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சீ.டபிள்யூ ராஜபக்ஷவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவைத் தேவையின் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , சீ.டபிள்யூ ராஜபக்ஷ கண்டி பொலிஸ் பிரிவில் இருந்து தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Ananya