வருடத்தில் இரண்டு நாட்களே வேலை – 40 இலட்ச ரூபாய் சம்பளம்!

வருடத்தில் இரண்டு நாட்கள் வேலை செய்வதற்கு மாதாந்தம் சுமார் 40 இலட்ச இலங்கை ரூபாயில் சம்பளம் பெறுகின்ற நபர் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த கெவின்  என்பவரே அவ்வாறு சம்பளம் பெறுகின்றார்.
அவரது வேலை அமெரிக்காவில் உள்ள சவுத் டக்கோடா பகுதியில் உள்ள 1500 அடி உயரமான தொலைபேசி கோபுரத்தில் ஏறி அதன் மின் விளக்கினை மாற்றுவதாகவும். ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை அவ்வாறு மின் விளக்கினை மாற்ற வேண்டும். அதனால் அவருக்கு வருடத்தில் 2 நாட்கள் மாத்திரமே வேலை ஆகும்.
1500 அடி உயரமான கோபுரத்தில் ஏறி மின் விளக்குகளை மாற்றும் பணிக்கு விண்ணப்பங்கள் கோரிய போது , எவரும் முன் வராத நிலையில் கெவின் அதற்கு முன் வந்து குறித்த வேலையை செய்து வருகின்றார். அவரது பணிக்கு அவர் பணியாற்றும் நிறுவனம் மாதாந்தம் 2ஆயிரம் அமெரிக்க டொலரை சம்பளமாக வழங்கி வருகிறது. அதன் இலங்கை பெறுமதி சுமார் 40 இலட்ச ரூபாய்.
“இந்தப் பணி சவால் நிறைந்த ஒன்று. இவ்வளவு பெரிய உயரத்திற்குச் செல்லும்போது பதட்டம் நிறைய இருக்கும். நான் 1500 அடி உயரத்தில் பணிபுரியும் போது மூன்று வகையான காலநிலை மாற்றத்தையும் பார்த்துள்ளேன். கடந்த எட்டு ஆண்டுகளாக அனைத்து விதமான டவர்களிலும் ஏறி வேலை பார்த்து வருகிறேன்” என ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்