ஓய்வை அறிவித்தார் மலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான மாலிங்க, எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அண்மையில் வெளியான உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்த மாலிங்க, தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெற்றுள்ளார்.

லசித் மாலிங்க, 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளையும் 226 ஒருநாள் போட்டிகளில் 338 விக்கெட்டுகளையும் 83 ரி-20 போட்டிகளில் 107 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளையும் சாதனைகளையும் நிலைநாட்டிய லசித் மாலிங்க ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், அவருக்கு இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், இரசிகர்கள் ஆகியோர் சமூகவலைதளங்களின் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்