தேரரைக் கடத்த முயற்சித்தவர்களுள் ஒருவர் கைது

அத்துருகிரிய விகாரையிலுள்ள தேரரைக் கடத்த முயற்சித்தவர்களுள் ஒருவரை சந்தேகத்தின் பேரல் நேற்று (16) மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த விகாரையிலுள்ள தேரர் ஒருவர் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முன்வைத்திருந்த முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி விகாரைக்கு அருகிலுள்ள கடைக்கு வருகை தந்து அந்த விகாரையிலுள்ள தேரரின் புகைப்படத்தைக் காட்டி வாகனத்தில் வந்த குழுவொன்று விசாரித்துள்ளது. இந்த தகவல் குறித்த தேரருக்கு அறியக் கிடைத்ததும், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த சந்தேகநபர் வெலிக்கடை, கெளதமீ வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.

குறித்த தேரர் பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஒருவர் எனவும் ஏற்கனவே வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya