
கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகிரிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முகத்தினை மறைத்துக் கொண்டு வீடொன்றில் நுழைந்த மூவர் வீட்டின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 44 வயதுடைய கதிர்காமத்தை வசிப்பிடமாக கொண்ட நபரொருவரே உயிரிழந்துள்ளார். நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில், கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.