விபத்தில் சிதைவடைந்த காரிலிருந்து உயிருடன் மீண்ட சாரதி

இரத்தினபுரி பகுதியில் இன்றைய தினம் காலை நடைபெற்ற விபத்தில் கார் ஒன்று சிதைவடைந்த நிலையில் , சாரதி உயிராபத்து இன்றி தப்பியுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டு இருந்த கமராவில் பதிவாகிய நிலையில் விபத்து காணொளி காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இரத்தினபுரி கெடந்தொல பகுதியில் இன்றைய தினம் காலை வீதியில் சென்ற கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி , மேலும் காருடன் மோதி , பின்னர் பாலத்துடன் மோதி , பாலத்தை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த வாய்க்காலுக்கு விழுந்து சேதமடைந்துள்ளது. அதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டி காயங்களுக்கு உள்ளாகி உள்ளார்.
கனரக வாகனம் மோதியதில் காரின் பின் பகுதி முற்றாக சிதைவடைந்துள்ளது. அந்நிலையில் காரின் சாரதி சிறு காயங்களுடன் காரில் இருந்து வெளியேறி வரும் காட்சி குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
அதேவேளை பாலத்துடன் மோதி , பள்ளத்தினுள் பாய்ந்த கனரக வாகன சாரதியும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் காயங்களுக்கு உள்ளவர்கள் இரத்தினபுரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்