சிசுவின் சடலம் மீட்பு

காசல் நீர் தேக்கத்திற்கு நீர் எந்திசெல்லும் டிக்கோயா ஆறு சென்று இணையும் காசல் ரீ நீர்தேக்கத்தில் ஆண் சிசு ஒன்று மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் இன்று காலை 10 மணியளவில் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காசல் ரீ நீர் தேக்கத்தில் குறித்த சிசு மிதந்து கொண்டு இருப்பதை மீன்பிடித்துக் கொண்டு இருந்த நபர் ஒருவர் கண்டுள்ளார். உடனடியாக அவர் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சடலமாக மீட்கப்பட்ட சிசு பிறந்த நிலையில் சடலமாக மீட்கபட்டதாகவும் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் தலைமையில் மரணவிசாரணைகள் இடம்பெற்றவுடன் சிசுவின் சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லபட உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.


Recommended For You

About the Author: Ananya