இலங்கையை வீழ்த்தி தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியது

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடை​யிலான இரண்டாவது ரி20 போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் Tabraiz Shamsi மற்றும் Aiden Markram ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.

Bjorn Fortuin இரண்டு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார்.

இதற்கமைய, தென்னாபிரிக்கா அணிக்கு 104 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 14.1 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

அதனடிப்படையில் 2-0 என்ற ரீதியில் தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்