வெளிவருகிறது ‘பிரேமம்’ இரண்டாம் பாகம் !!

பிரேமம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப்போவதாக மலையாள திரைப்பட உலகில் கூறப்படுகின்றது.

நடிகை சாய் பல்லவி ‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் இவருடைய அழகும், யதார்த்தமான நடிப்பும் பேசப்பட்டன. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப்போவதாக மலையாள திரைப்பட உலகில் கூறப்படுகின்றது.

இதுகுறித்து சாய் பல்லவி தெரிவிக்கையில், “தன்னை நடிக்க அழைத்தால், நிச்சயமாக நடிப்பேன்” என் கூறியுள்ளார்.

‘பிரேமம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படமாகும்.

அல்போன்சு புத்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் நிவின் பவுலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்திருந்தனர்.

இத்திரைப்படம் இரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor