
வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊஞ்சல்கட்டி பகுதி காட்டிலிருந்து யானையின் சடலம் ஒன்றை பொலிசார் நேற்றையதினம் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் யானையின் சடலம் ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற பொலிசார் யானையின் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த யானை இரண்டு நாட்களிற்கு முன்பாகவே இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார், இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்ததுடன், யானை இறந்தமைக்கான காரணத்தை அறியும் முகமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.