புளோரிடாவில் அமெரிக்க வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு

புளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

முழு உடல் கவசம் அணிந்த ஒருவர் தாய் மற்றும் 3 மாத குழந்தை உட்பட 4 பேரை சுட்டுக் கொன்றதாக புளோரிடா மாகாண பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கி சூட்டினை நடத்தியவர் 33 வயதான முன்னாள் இராணுவ வீரர் என்றும் அவர் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஏழு முறை சுடப்பட்ட 11 வயது சிறுமி ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என்றும் அதிகாரிகள் கூறினர்.


Recommended For You

About the Author: ஈழவன்