இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையர் யார்?

ரிலையன்ஸ் நிறுவனத்துடனான உடன்பாடு மூலமாக, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையர் என்ற அந்தஸ்தை, சவுதி அரேபியா மீண்டும் தக்க வைக்க உள்ளது.

நன்கு அறியப்பட்ட சவுதி அரேபிய அரசு நிறுவனமான அரம்கோ (Aramco), ரிலையன்ஸின் O-2-C எனப்படும் பெட்ரோலிய எண்ணெயில் இருந்து ரசாயனம் தயாரிக்கும் வணிகத்தில் 20 விழுக்காடு அளவிற்கு முதலீடு செய்ய இருக்கிறது.

இதனை கடந்த திங்களன்று நடைபெற்ற தனது நிறுவனத்தின் 42ஆவது ஆண்டுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

இதன்மூலம், நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு, சவுதி அரேபியாவின் அரம்கோ சப்ளை செய்யும்.

இந்தியாவின் பாரம்பரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக விளங்கிய சவுதி அரேபியா, ரிலையன்ஸ் நிறுவனத்துடனான அரம்கோ உடன்பாட்டின் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தர் என்ற பெருமையை பெற உள்ளது.


Recommended For You

About the Author: Editor