2 ஏவுகணை ஏவி வடகொரியா மீண்டும் சோதனை

வடகொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளாது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து இந்த மாத தொடக்கம் முதல் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது.

இன்று காலை வடகொரியா ரகசியமாக இரண்டு ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

காங்வோன் மாகாணத்தில் உள்ள டோங்சோன் நகரத்தில் இருந்து ஜப்பான் கடற்பகுதிக்கு இந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில் வடகொரியா நடத்தும் 6ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

இதனிடையே அமெரிக்காவுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் தென்கொரியா ஈடுபடுவது இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை என்றும், எனவே தென்கொரியாவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor