சீனாவுடன் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும்-டிரம்ப்!

வரும் செப்டம்பரில் சீனாவுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, டிரம்ப் நிர்வாகம் புதிதாக வரிகளை விதித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மீண்டும் தீவிரமடைந்தது.

சீனாவும் பதிலடி நடவடிக்கையில் இறங்கியதால், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் நடத்தி வரும் பேச்சுவார்த்தை கேள்விக்குறியானது.

இரு நாடுகளுக்கும் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடைபெற இருந்த நிலையில், அது ரத்து செய்யப்படலாம் என கடந்த வாரத்தில் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், சீனாவுடன் நடைபெற உள்ள வர்த்தகப் பேச்சுவார்த்தை இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்று அவர் தற்போது கூறியுள்ளார்.

செப்டம்பரில் சீனாவுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க்கொண்டிருந்தாலும், அந்நாடு ஏதேனும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டால், அமெரிக்காவும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தயங்காது என டிரம்ப் எச்சரித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor