விடுதலைபெற உதவுமாறு இந்தியாவிடம் கோருகிறது பலுஸிஸ்தான்!!

பாகிஸ்தானின் ஆதிக்கம் மற்றும் அதன் இராணுவ கெடுபிடிகளில் இருந்து தங்கள் நிலத்தை விடுவிக்க இந்தியாவின் ஆதரவு தேவை என பலுஸிஸ்தான் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் 73ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு பலுஸிஸ்தான் மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாழ்த்து செய்தியிலேயே மேற்குறிப்பிட்ட விடயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாழ்த்துச் செய்தியில், “எனது இந்திய சகோதர சகோதரிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். கடந்த 70 ஆண்டுகளில் நீங்கள் பெற்ற வெற்றி இந்தியர்களை பெருமைப்படுத்துகிறது. இன்று, இந்தியர்கள் உலகம் முழுவதும் பெருமையோடு வாழ்கிறார்கள்.

பலுஸிஸ்தான் விடுதலைக்கு நீங்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு உங்களின் ஆதரவு தேவை. நன்றி ஜெய் ஹிந்த்” எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பலுஸிஸ்தான் விடுதலைக்காக போராடும் மற்றுமொரு சமூக ஆர்வலரும் இந்த விடயத்தை இந்தியா அதிகாரபூர்வமாக உலகளவில் பேசவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பலுஸிஸ்தான் மாகாண மக்கள், தங்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள பலுஸிஸ்தானை 1948இல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமித்தது வருகின்றது. அப்பகுதியில் இயற்கை எரிவாயு வளம் அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor