ஹங்கேரி விபத்து – விசாரணைக்கு உத்தரவு!

ஹங்கேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற படகு விபத்து குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹங்கேரியின் டன்யூப் ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் உயிரிழந்திருந்ததுடன், 19 பேர் காணாமல் போயிருந்தனர்.

தென்கொரிய சுற்றுலாப்பயணிகள் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்தநிலையில் விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஒர்பன் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விபத்துக்குள்ளான படகின் மாலுமி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor