காஷ்மீரில் விரைவில் கல்வி நிறுவனங்கள்

காஷ்மீரில் பாடசாலை, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் இரத்து செய்ததுடன், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்குள்ள 10 மாவட்டங்களில் கடந்த 5 ஆம் திகதி முதல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. தொலைபேசி மற்றும் இணைய சேவைகளும் முடக்கப்பட்டன.

அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக, பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறன.

சில நாட்களுக்கு முன், ஐந்து மாவட்டங்களில் மட்டும் பாடசாலை, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், எதிர்வரும் 19 ஆம் திகதி அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor