காண்போரை ரசிக்க வைக்கும் முழு நிலவு காட்சி!!

கிரீஸ் நாட்டின் புகழ்பெற்ற கொரோனி அரண்மனையின் பின்புறம் ஜொலித்த முழு நிலாவின் காட்சி காண்போரை ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

13-ம் நூற்றாண்டில் வெனடியன்களால் கட்டப்பட்டது கிரீஸ் நாட்டில் உள்ள கொரோனி அரண்மனை.

பண்டைய காலத்தில் தாக்குதலுக்கு ஆளானபோதும் கம்பீரமாக நிற்கும் கெரோனி அரண்மனை நேற்று விளக்கலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலிக்க வைக்கப்பட்டிருந்தது.

அதனருகே நதிக்குப் பின்புறமிருந்து, மிதக்கும் மேகங்களுக்குப் பின் ஒளிந்துகொண்டு எட்டிப்பார்ப்பது போல் தோற்றமளித்த அழகிய முழு நிலவின் காட்சி ரம்யமயமாக இருந்தது.


Recommended For You

About the Author: Editor