மீரா மிதுன் கைது!

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்,  நடிகை மீரா மிதுனை கேரளா பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மீரா மிதுனை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைப்பாணை அனுப்பிய நிலையில் அவர் நேற்று முன்தினம் அதனை அவமதிக்கும் வகையில் மிகவும் திமிராக பேசி மீண்டும் ஒரு வீடியோ பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

குறிப்பாக பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசிய சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் தலைமறைவாகவிருந்த மீரா மிதுனை கேரளா பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்