31 அதிகாரிகள் பிரகேடியராக பதவி உயர்வு!!

இலங்கை இராணுவத்தின் கேர்ணல் தர அதிகாரிகள் 31 பேர் பிரிகேடியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அதிகாரிகளுக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பதவி கடந்த ஜூலை 30 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor