பிணைக் கைதி சுட்டுக் கொலைசெய்த ஜ.எஸ்

பிலிப்பைன்ஸில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவு அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்ட நெதர்லாந்து பிரஜை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஐ.எஸ். ஆதரவு அமைப்பான அபு சய்யஃப் பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த நெதர்லாந்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர் எவோல்ட் ஹார்ன் என்பவரே நேற்று(வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது, இராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எவோல்ட் ஹார்ன் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனைக் கண்ட பயங்கரவாதிகள், அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவோல்ட் ஹார்ன் உள்ளிட்ட மூவர் கடந்த 2012-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor