கேப்டனாகிவிட்டார் மதுமிதா! கவின் கோஷ்டிக்கு ஏழரையா?

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா திடீரென பெண்களுக்கு ஆதரவாக பொங்குவதும், ஆண்கள் மீது குற்றஞ்சாட்டுவதும் செயற்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அவர் கேப்டனுக்கான போட்டியில் வெற்றி பெற்றுவிட்டதால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அவரது வெளியேற்றம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது

இந்த வார எவிக்சன் பட்டியலில் மதுமிதா இருந்தாலும், அபிராமி குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் வெளியேற்றப்படுவார் அல்லது சீக்ரெட் அறையில் வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக நடித்த தர்ஷன், மதுமிதா மற்றும் ஷெரின் ஆகியோர்களுக்கு ஒரு போட்டி வைக்கப்படுகிறது.

இந்த போட்டியில் மதுமிதா வெற்றி பெற்றுவிடுவதால் அவர் தான் அடுத்த வார கேப்டன் என்பது மட்டுமின்றி அடுத்த வார நாமினேஷனில் இருந்தும் அவர் தப்பிவிடுகிறார்.

எனவே இந்த வாரமும் அடுத்த வாரமும் மதுமிதா வெளியேற வாய்ப்பு இல்லை என்பதால் கவின் அணிக்கு இன்னும் இரண்டு வாரம் ஏழரைதான் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மதுமிதா கேப்டன் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்றவுடன் சேரன் அடைந்த சந்தோஷத்தை பார்க்கும்போது அடுத்த வாரம் மதுமிதா-சேரன் கூட்டணி கவின் கூட்டணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது

 


Recommended For You

About the Author: Editor