‘பிகில்’ இசை வெளியீடு குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

என்பதும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஒருசில பேட்ச்வொர்க் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில் விரைவில் ‘வெறித்தனம்’ என்ற பாடலும் வெளியாகவுள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த விழாவுக்கான மேடை அமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

அனேகமாக அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ‘பிகில்’ இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது

 


Recommended For You

About the Author: Editor