கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் சமுத்திரக்கனி! என்ன கேரக்டர்?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இந்த படப்பிடிப்பில் ரகுல் ப்ரித்திசிங் கலந்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் நேற்று முதல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் பிரியா பவானிசங்கரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல்ஹாசனும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் சமீபத்தில் ரகுல் ப்ரித்திசிங், பிரியா பவானிசங்கர், வித்யூத் ஜாம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் இணைந்த நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது


Recommended For You

About the Author: Editor