சில வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனம்

கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடனகப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாலும் வைத்தியசாலையில் கடமையாற்று பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாலும் இவ்வாறு அவசர நிலை பிரகடனகப்படுத்தப்பட்டுள்ளதாக காலி வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்