600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி அவர்கள் இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து சுகாதார பணியாளர்களையும் கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்