துருவ் விக்ரம் பாடிய ‘ஆதித்ய வர்மா’ பாடல் வரிகள்

துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் இந்த படத்திற்காக பாடிய ‘எதற்கடி வலி தந்தாய்’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

முதல் பாடலையே ஒரு சிறந்த பாடகர் போன்று பாடியிருக்கும் துருவ் விக்ரம் பாடிய பாடல் இதோ:

எதற்கடி வலி தந்தாய்
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வலி ஒன்றும்
உலகில் இல்லையே
நீதானடி நினைவின் தேனியே
என் வாழ்க்கையில் விழி நீரின் தீனியே
எனை கொஞ்சி சாய்க்கவே
கொஞ்சம் வந்து போய்விடு
உன்னை பார்க்கணும்…….
என் சுவாசம் நீயே
என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே
எண்ணத்தின் தீயே

உன்னை தவிர எதுவுமே இஷ்டமில்லையே
விட்டு போன வேதனையே
வட்டம் போட்டு என்னை வெறுக்கும்
காதல் தீயிலே உந்தன்
கண்கள் தேடினேன்
உன்னை பார்க்கணும்…..
என் சுவாசம் நீயே
என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே
எண்ணத்தின் தீயே

எதற்கடி வலி தந்தா
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வலி ஒன்றும்
உலகில் இல்லையே

ராதன் இசையில் விவேக் பாடல் வரியில் துருவ் விக்ரம் பாடிய இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


Recommended For You

About the Author: Editor