ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டிலில் தேசியப்பற்று!

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படம் நேற்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தலை பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், ரிலீஸ் ஆன அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தப் படம் வெற்றிப் படம் என்பதால் ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ஜெயம் ரவி தனது 25வது படமாக லட்சுமண் இயக்கும் படம் ஒன்றை படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படம் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் பற்றிய திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ‘

என்றென்றும் புன்னகை’ இயக்குனர் அகமது இயக்க உள்ள ஜெயம் ரவியின் 26 வது படத்திற்கு ‘ஜனகனமன’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜெயம்ரவி ராணுவ வீரராக நடிக்க இருப்பதாகவும், தேசியப் பற்று மிக்க கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு பொருத்தமாக ‘ஜனகனமன ‘ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது


Recommended For You

About the Author: Editor