ஐஸ்வர்யா தத்தா-ஜூலி இணைந்து நடிக்கும் பயங்கர கேம் திரைப்படம்!

பிக்பாஸ் முதல் சிசனில் கலந்து கொண்ட ஜூலியும், பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து ஒரு பயங்கரமான கேம் படத்தில் நடிக்கின்றனர்.

பப்ஜி கேம் குறித்த திரைப்படமான இந்த படத்திற்கு ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தாதா 87, பிட்ரூ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஐஸ்வர்யா தத்தா, ஜூலி உள்பட ஐந்து நாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் பப்ஜி என்ற கேரக்டரில் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள்.

ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு அந்த பரிசு என்ன? இந்த கேம் காரணமாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

இந்த படத்தில் திரையில நடிக்காம  ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை  நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்று கூறினார்

இவர் ஏற்கெனவே  87 வயது சாருஹாசன் மற்றும்  ஐனகராஜ் அவர்களையும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த  நடிகர் அம்சவர்தனை வைத்து  பீட்ரு என்ற படம் இயக்கிவருகிறார் என்பதும் அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor