கடல்வழிசென்ற அகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம்!!

அவுஸ்ரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் அவுஸ்ரேலியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதாக அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அவுஸ்ரேலிய அரசாங்கம் 20 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய தடுப்பு முகாமிற்கு அகதிகள் மாற்றப்படுவதை உறுதி செய்யும் விதமாக, மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அதிகாரிகளின் உத்தரவு கடிதத்தை ட்வீட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

‘நீங்கள் புதிய மையத்திற்கு(முகாம்) மாற்றப்படுவதால், உங்கள் கையடக்க தொலைபேசியை ஒப்படைத்தாக வேண்டும்’ என குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களிலுள்ள அகதிகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இது புதியதொரு சிக்கலாக உருவெடுக்கும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor