சிறைப்பிடிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை!

ஜிப்ரால்டரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈரானிய எண்ணெய்க் கப்பலில் பணியாற்றிய நான்கு இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் நேற்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜிப்ரால்டரில் தடுத்து வைக்கப்பட்ட ஈரானிய எண்ணெய்க் கப்பலை விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய குறித்த நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட நால்வரும், தங்களின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஈரானிய மசகு எண்ணெயைத் தாங்கிய கிரேஸ் 1 என்ற கப்பல் கடந்த ஜூலை மாதம் 4 ஆம் திகதி பிரித்தானிய ரோயல் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor