06 பில்லியன் ரூபாயை வங்கியில் வைப்பிலிட்ட பெண் கைது!

தனது வங்கி கணக்கில் 06 பில்லியன் ரூபாய் பணத்தினை வைப்பிலிட்ட 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் குறித்த பெண் 06 பில்லியன் ரூபாய் பணத்தினை வைப்பிலிட்டுள்ளார். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு பிரிவினர் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
நான்கு மாத கால பகுதியில் குறித்த பணத்தினை சம்பாதித்து வைப்பிலிட்டுள்ளார் எனவும் , போதை பொருள் வர்த்தகம் ஊடாகவே அப்பணம் கிடைக்கப்பெற்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: ஈழவன்