இலங்கை வரும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் !

அமெரிக்காவின் அரசியல் – இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் R. Clarke Cooper இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், அவரின் இலங்கைக்கான விஜயத்தின் போது, பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுதல், கண்ணிவெடிகளை அகற்றுதல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இருதரப்புக்கும் முக்கியமான வேறு பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor