கடைக்­கு சென்­ற­ இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் மந்துவில் பிரதேசத்தில் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவரின் கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இனந்­தெ­ரி­யா­த­வ­ரின் வாள்­வெட்­டுக்கு இலக்­காகி இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

மந்­து­வில் மேற்கு கொடி­கா­மத்­தைச் சேர்ந்த 25 வய­து­டை­ய­வரே இந்த நிலைக்கு ஆளா­னார்.

தனது பிறந்­த ­நா­ளுக்­காக பொருள்­கள் வாங்­கக் கடைக்­குச் சென்­ற­போது வழி­ம­றித்த இனந்­தெ­ரி­யாத நப­ரின் வாள் வெட்­டுக்கு இலக்­காகி கை துண்டாடப்பட்ட நிலை­யில் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­ வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு பின்னர் யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார்.

இது தொடர்பில் எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


Recommended For You

About the Author: Ananya