புலமைப் பரிசில் பரீட்சைக்கு தொடர்பில்லாத வினாக்கள்!

அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில், பாட்டத்திட்டத்துடன் தொடர்பு படாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அந்த வினாத்தாளின் 6வது கேள்வி, 3ம்,4ம் அல்லது 5ம் வகுப்பு பாடத்திட்டங்களுடன் சம்மந்தப்பட்டது இல்லை என்றும், அது 6ம் வகுப்பு கணிதப்பாடத்துடன் தொடர்புடையது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணியின் போது இதுகுறித்து அவதானம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எமது செய்திசேவை பரீட்சைகள் ஆணையாளர் ஜனரல் சனத் பூஜித்தவை தொடர்பு கொண்டு வினவியபோது, அவ்வாறான சிக்கல் இருக்குமாக இருந்தால் விடைத்தாள் திருத்தப் பணியின் போது கவனம் செலுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor