கறுப்பு ஜூலையை முன்னிட்டு போராட்டம்

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று முன்னெடுக்கப்பட்டது.

கருப்பு ஜூலை 23 நினைவு நாளை முன்னிட்டு யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக  இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை  இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, இன அழிப்புக்கு நீதி வேண்டும்,  அரசியல் கைதிகளை விடுதலை செய், வெளியேறு இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர்.


Recommended For You

About the Author: ஈழவன்