1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும் சுமார் 100,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் முக்கிய தளவாட மையமான ஹெனான் முழுவதும் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டு விமானங்கள் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகுதி வரை, 617.1 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானதாகவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்