
தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை அடுத்து களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
களு கங்கையின் மில்லகந்த என்ற இடத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மாலா அலவத்துக்கொட தெரிவித்தார்.
இருப்பினும், களனி, ஜின் கங்கை, நில்வளகங்கை ஆகிய நதிகளில் நீரின் மட்டம் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர் மட்டம் அதிகரித்து வரும் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.