அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

பிரச்சினைகளை சரியான முறையில் இனங்கண்டு சிறந்த நாட்டையும் சிறந்த எதிர்கால தலைமுறையையும் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா தொழில் வழிகாட்டல் நிலையத்தை நேற்று(வியாழக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் அனைத்து பிள்ளைகளுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் நியாயமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு கடமைகளை நிறைவேற்றி வருகின்றேன்.

இன, மத பேதமின்றி நாட்டின் அனைத்து பிள்ளைகளுமே எனது பிள்ளைகளாவர். அவர்களுக்கான எனது கடமைகளை தவறாது நிறைவேற்றுவேன்.

அரசியல் நோக்கமின்றி இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஊடாக இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கான விரிவான வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது’ என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor