அரச ஊழியர் செய்த கொடூரச் செயல்! 12பேர் பலி!!

அமெரிக்காவில் தொழில் துறை ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நேரப்படி நேற்று (31) வெள்ளிக்கிழமை மாலை விர்ஜீனியா மாநிலத்தில் அமைந்துள்ள, அரச கட்டிடம் ஒன்றில் ஊழியர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் நீண்ட துப்பாக்கிப் பிரயோகங்களின் பின்னர் குறித்த துப்பாக்கிதாரியை சுட்டுக் கொன்றுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக மருத்துவமனையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இத் தாக்குதலை மேற்கொண்டவர், ஒரு அரச தொழில் துறை ஊழியர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor