ரயில் சேவை அபிவிருத்திக்காக 160 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

இலங்கையின் ரயில் சேவை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 160 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியிருக்கிறது.

இந்த நிதி மூலம் ரயில் சேவைகளின் செயற்திறனை அதிகரிப்பதன் ஊடாக அச்சேவையை நவீன மயப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டளவில் நாட்டில் உயர்வடைந்து செல்லும் மக்கள் தொகைக்காக பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடனுதவி வழங்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் போக்குவரத்துப் பிரிவு விசேட நிபுணர் ஜொஹான் ஜோர்ஜெட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னேற்றகரமாக ரயில் போக்குவரத்து ஏனைய சேவை அபிவிருத்திகளுக்கும், நாடளாவிய ரீதியிலான கைத்தொழில் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக அமையும் என்பதுடன் சாத்தியமானதும், வசதியானதுமான போக்குவரத்து என்ற தெரிவை மக்களிடத்தில் ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்