சஹரானுடன் தொடர்பு – சிறுவன் கைது

பயங்கரவாதி சஹரானுடன் தொடர்புடையதாகத் தெரிவித்து 16 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சஹரானுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நௌபர் மௌலவியின் மகனான நௌபர் அப்துல்லா என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர் அம்பாறையில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷீமுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் 3 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சஹ்ரான் தொடர்பான விசாரணைக்காக அவரின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதுடன் சஹ்ரானின் வீடு அமைந்துள்ள காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த சாட்சியாளர்கள் இருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்