
சரத் பொன்சேகா விரைவில் எம்முடன் இணைந்து செயற்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவமிக்கது என்பதை உணர்ந்துள்ளதனாலேயே கோத்தபாய ராஜபக்சவின் தெரிவு சரியானது என்பதை சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.
சரத் பொன்சேகா விரைவில் எம்முடன் இணைந்து செயற்படுவார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு நாடுமுழுவதும் பாரிய வரவேற்பு காணப்படுகின்றது. நாம் தேர்தலுக்கு சிறந்த முறையில் தயாராகி வருகின்றோம்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு நாடளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றது. நாம் பல்வேறு இடங்களுக்கு எமது வேட்பாளரை அழைத்துச் செல்கின்றோம்.
மக்கள் பாரிய அளவில் வரவேற்பு வழங்குகின்றனர். தற்போது கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டமை சரியான முடிவு என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நிபுணராக காணப்படுகின்றார். அவர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலேயே கோத்தாவின் தெரிவை சரியானது என கூறுகின்றார்.
சரத் பொன்சேகா விரைவில் எம்முடன் இணைந்து செயற்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.